மெறோக்கோ நாட்டைச் சேர்ந்த டாக்டர் யூசுப் எல் அசூசி உலகில் முதல்முறையாக ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவி நேரடியாக ரத்த நாளங்களுக்குள் இருந்தே ரத்தத்தை வடிகட்டும் திறன் கொண்டது.
இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாத நிலைமையில் இருக்கும் நோயாளிகளுக்கு பயன் கிட்டும்.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளிலும் (organ transplant) இந்த கருவி பெரிதும் உதவும். புதிய உறுப்பு நிராகரிக்கப்படும் அபாயத்தை குறைக்கும். கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றக்கூடிய கண்டுபிடிப்பு. நாமும் வாழ்த்துவோம்