அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆசனப்பட்டி இல்லாத சில வாகனங்களுக்கு ஆசனப்பட்டியை பொருத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும்.
குறித்த தீர்மானத்திற்கு மாறாக செயல்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.