நடிகர் விஜய் கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள் என மோடியிடம் வலியுறுத்திய நிலையில், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார (01) கச்சதீவிற்கு விஜயம் மேற்கொண்டார். முன்னதாக யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, கச்சத்தீவு நமக்கு முக்கியத்துவமானது. கச்சத்தீவு தொடர்பில் பெரிய விவாதம் எழுந்துள்ளது. இலங்கையின் எல்லை நிலப்பரப்பைத் தாண்டி, கடல் எல்லைகள், வான்வெளியை உள்ளடக்கியது. நமது தீவுகள், நமது கடல், நமது வானம், நமது நிலம். அவை நமது மக்களுக்குச் சொந்தமானவை. எதிர்கால சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம். எந்த வகையான அழுத்தத்துக்கும் நாங்கள் அடிப்பணியமாட்டோம்.