• Sat. Oct 11th, 2025

கடலில் பிடிபட்டது 6 அடி நீளமான பேய் மீனா? வேற்றுக்கிரக வாசியா? வைரலான புகைப்படம்!

Byadmin

Oct 30, 2017

கடலில் பிடிபட்டது 6 அடி நீளமான பேய் மீனா? வேற்றுக்கிரக வாசியா? வைரலான புகைப்படம்!

ஜப்பானைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பிடித்த மீன் ஒன்று, பார்க்க பயங்கரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஜப்பானின் தீவான ஹொக்கைடோவுக்கும், ரஷ்ய கரைக்கும் இடையில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒருவரின் வலையில் சுமார் ஆறடி நீளமான பெரிய மீன் ஒன்று சிக்கியது.

இந்த மீனின் வித்தியாசமான உருவ அமைப்பு, இது மீன்தானா? அல்லது, வேற்றுலக வாசியா? இல்லாவிட்டால், புகுஷிமா அணு உலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட மாற்றமா? என இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோரை பீதியடைய வைத்துள்ளது.

இது ‘வொல்ஃப் மீன்´ (Wolffish) வகை எனவும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

இந்த மீனின் அதீத வளர்ச்சிக்கான காரணத்தை தற்போது ஆய்வு செய்து கண்டறியும் முயற்சியில் ஜப்பானிய மீன்வளத்துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *