• Sat. Oct 11th, 2025

மகிழ்ச்சியாக வாழ்ந்த நான் இன்று…. ஒரு ரோஹிங்கிய முஸ்லிமின் (நூரி பேகம்) கண்ணீர்!

Byadmin

Oct 31, 2017

மகிழ்ச்சியாக வாழ்ந்த நான் இன்று…. ஒரு ரோஹிங்கிய முஸ்லிமின் (நூரி பேகம்) கண்ணீர்!

ரோஹிங்கியாவிலிருந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள நூரி பேகம் கூறுகிறார்,

“ரோஹிங்கியாவில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். என் கணவர், மகன் என்று ஆனந்த வாழ்க்கை. நாங்கள் என்ன தவறு செய்தோம்? மியான்மர் ராணுவம் எங்கள் மீது ஏன் இந்த கொலைவெறி தாக்குதலை நடத்த வேண்டும்?

என்னிடம் இருந்த நகைகள், வீடு, கோழிகள் மாடுகள் என அனைத்தையும் மியான்மர் ராணுவம் எரித்து சாம்பலாக்கிவிட்டது. என் பிள்ளையை மியான்மர் ராணுவம் கொன்றுவிட்டது. என் கணவரையும் இழந்துவிட்டேன்.

கடந்த ஒரு வாரமாக இரவு பகல் என்று நடந்துகொண்டே இருக்கிறேன். இதற்கு மேல் என்னால் நடக்க முடியவில்லை. இரண்டு நாட்களாக உணவும் இல்லை. நான் மிகவும் சோர்ந்து விட்டேன். தண்ணீர் மட்டுமே குடித்துக் கொண்டு வாழ்ந்தேன். தற்போது அதுவும் கிடைப்பதில்லை.

ஆனாலும் என் நாட்டை இன்றும் நேசிக்கிறேன். அதை இழக்க நான் தயாரில்லை. மியான்மரில் அமைதி திரும்பும். மீண்டும் அங்கு என் இருப்பிடத்திற்கு செல்வேன் என காத்திருக்கிறேன்.

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *