• Sat. Oct 11th, 2025

”நாணயத் தாள்கள் குறித்து அவதானமாக இருக்கவும்”

Byadmin

Sep 19, 2025

பொருட்களை வாங்கும் போதும், பணத்தை கையாளும் போது அப்பணத்தாள் போலியானதா? என்பதை சரிபார்க்குமாறும் பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு பணத்தைப் பயன்படுத்தும் போதும் கவனமாகவும் இருக்குமாறும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்துகிறது.

பணம் போலித்தனமானது அல்ல என்பதைச் சரிபார்த்த பின்னரே, பணத்தைப் பயன்படுத்தவும், அத்தகைய போலி நாணயத்தாள்களை வைத்திருப்பவர்கள் அல்லது கையாளுபவர்கள் பற்றிய தகவல் கிடைத்தவுடன் உடனடியாக இலங்கை பொலிஸாருக்கு தெரிவிக்கவும் என்றும் பொலிஸ் அறிவுறுத்துகிறது.

இதற்கிடையில், ஹபரானா நகரில், தலா இரண்டு போலி ரூ. 5000 தாள்களை வைத்திருந்த மேலும் இரண்டு பேர் வியாழக்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டனர்.

மேலும் விசாரணைகளின் போது, ​​போலி ரூ. 5000 நாணயத்தாள்களை அச்சிட்ட ஒரு சந்தேக நபரும், அத்தகைய 138 நாணயத்தாள்கள் மற்றும் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *