• Fri. Nov 28th, 2025

எல்ல விபத்து: ஜீப்பின் பாதுகாப்பு கெமராவில் பதிவு வசதிகள் இல்லை

Byadmin

Sep 19, 2025

எல்ல-வெல்லவாய பிரதான சாலையில் உள்ள 15வது மைல்கல்ஸ்ர பகுதியில் 1,000 அடி பள்ளத்தில் பாறையில் விழுந்து 16 பேர் கொல்லப்பட்டு 17 பேர் காயமடைந்த சுற்றுலாப் பேருந்துடன் மோதிய சுமார் 800 மில்லியன் ரூபாய் (80 மில்லியன் ரூபாய்) மதிப்புள்ள சொகுசு ஜீப்பின் பாதுகாப்பு கெமரா அமைப்பில் பதிவு செய்யும் வசதிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக எல்ல பொலிஸார் வியாழக்கிழமை (18) தெரிவித்துள்ளனர்.

ஜீப்பை விற்ற நிறுவனம் வழங்கிய அறிக்கையின் அடிப்படையிலேயே பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

இந்த சொகுசு ஜீப் பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள ஒரு வாகன விற்பனையாளரிடமிருந்து 2023 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது என்றும், சொகுசு ஜீப்பில் நான்கு நேரடி பாதுகாப்பு கெமராக்கள் உள்ளன என்றும், வாகனம் ஓட்டும் ஓட்டுநரின் வசதிக்காக கெமராக்கள் இயக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், இந்த சொகுசு ஜீப்களின் பாதுகாப்பு கெமராக்களின் பதிவு வசதிகளைப் பெறுவதற்கு, வாகன உரிமையாளர்கள் நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும், அத்தகைய கோரிக்கை விடுக்கப்பட்டால் மட்டுமே, சொகுசு ஜீப்களின் கெமராக்களில் பதிவு செய்யும் மென்பொருள் நிறுவப்படும் என்று நிறுவனம் தங்களுக்குத் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபோன்ற சொகுசு ஜீப்களை வாங்கும் பல வாகன உரிமையாளர்கள் வாகனத்தின் கெமராக்களில் பதிவு செய்யும் மென்பொருளை நிறுவக் கோருவதில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்காலை நகராட்சி மன்ற ஊழியர்கள் குழு ஒன்று நுவரெலியாவிலிருந்து தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணமாக தங்காலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். 4 ஆம் திகதி இரவு, சுற்றுலாப் பேருந்து, எல்லா-வெல்லவாய பிரதான சாலையில் 15வது மைல்கல் பகுதியில் அந்த பேருந்துக்கு முன்னால் வந்து கொண்டிருந்த சொகுசு ஜீப்பில் மோதி, பின்னர் சாலையின் இருபுறமும் கட்டப்பட்ட பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி, ராவணன் எல்லா பளளத்தில் விழுந்தது.

இந்த விபத்தில் தங்காலை நகராட்சி மன்றத்தின் செயலாளர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நகராட்சி மன்ற ஊழியர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட மோட்டார் வாகன விற்பனை நிறுவனம் மூலம் பண்டாரவளை நீதிமன்றம் பெற்ற நீதிமன்ற உத்தரவின் பேரில் எல்ல பொலிஸார் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *