கத்தார் மீதான தாக்குதல் மூலம் அந்நாட்டின் இறையாண்மையை மீறியதற்காக ‘இஸ்ரேலிய’ பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானியிடம் மன்னிப்பு கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தாக்குதலில் ஒரு கத்தார் பாதுகாப்பு காவலர் கொல்லப்பட்டதற்கு நெதன்யாகு வருத்தம் தெரிவித்ததாக அறிக்கை கூறுகிறது.நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பின் போது இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. அங்கு இருவரும் காசாவின் நிலைமை மற்றும் கத்தார் தலைநகர் மீதான தாக்குதல் குறித்து விவாதித்ததாகவும் மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.