இருள் சூழ்ந்த நேரத்தில் உண்மையான நண்பனைப் போல் இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவியது என்று நெகிழ்ச்சியுடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
ஹரிணி அமரசூர்யா டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். கடந்த 1991 முதல் 1994 வரை டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை சோஷியாலஜி படித்து பட்டம் பெற்றார். அவர் பிரதமரானதும் முதன்முறையாக இந்தியா சென்றுள்ளார். அங்கு தான் கல்விகற்ற பல்கலைக்கழகத்திற்கும் சென்றுள்ளார்.
இதன்போது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதுடன, பேசியபோது, ‘கல்வியும், கருணையும் ஒன்றாக கைகோர்த்துச் செல்ல வேண்டும். கருணை இல்லாமல் அறிவு முழுமையடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.