இலங்கை சுங்கத் திணைக்களம் அதன் வரலாற்றில் ஒரே நாளில் நேற்று, (15) அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. ரூ. 2470 மில்லியன் வரி வசூலிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு, 15/10/2025 நிலவரப்படி ரூ. 1,867 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.
இதற்கமைய, 2025ஆம் ஆண்டுக்காக சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்கான ரூ. 2,115 பில்லியனை மிக எளிதாக ஈட்டிக்கொள்ள முடியும் என்றும் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.