இலங்கையில் வாகனங்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், வாகனங்களை வாங்குபவர்களுக்கு இதுவே சிறந்த நேரம் என்று வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ, Hiru க்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.
வரி மாற்றங்கள் இல்லாவிட்டாலும், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
இதன் காரணமாக, பொதுவாக ஒவ்வொரு வாகனத்தின் விலையும் 10 இலட்சம் ரூபாய் முதல் 15 இலட்சம் ரூபாய் வரையில் குறைவடைந்துள்ளது. எனவே, இது வாகனங்களை வாங்குபவர்களுக்குச் சிறந்த நேரமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்