மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை தரவுகளின்படி, இலங்கையின் ‘பாலின விகிதம்’ 93.3 ஆகப் பதிவாகியுள்ளது.
பாலின விகிதம் என்பது, ஒவ்வொரு 100 பெண்களுக்கும், உள்ள ஆண்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் ஒரு முக்கியமான சனத்தொகை குறியீடாகும்.
இந்தச் சனத்தொகைக் கணக்கெடுப்பில் மொனராகலை மாவட்டம் அதிகபட்ச பாலின விகிதத்தை, அதாவது 97.9 ஆகப் பதிவு செய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக மன்னார் மாவட்டம் 97.3 என்ற அதிக சதவீதத்தை காட்டுகிறது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே குறைந்த பாலின விகிதம் பதிவாகியுள்ளது. அது 88.0 சதவீதமாகும்.
