• Sat. Nov 1st, 2025

பப்ஜி கேமுக்கு அடிமை – உயிர்விட்ட இளைஞர்

Byadmin

Oct 31, 2025

யாழ்ப்பாணம் – உரும்பிராயில் 31 வயதான இளைஞர் பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையாகி உயிர்மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த நபர் கைபேசியில் விளையாடப்படும் பப்ஜி எனப்படும் கேமிற்கு அடிமையாகியுள்ளார். இவர் மீட்டர் வட்டிக்கு பணத்தினை பெற்று குறித்த கேமிற்கான கட்டணத்தை செலுத்தி விளையாடிக் கொண்டிருந்தார்.

மீட்டர் வட்டிக்கு கடனாக பெற்ற பணமானது வட்டியும் முதலுமாக ஒரு கோடியை தாண்டிய நிலையில், தாயார் காணியை விற்பனை செய்து அந்த கடனில் இருந்து அவரை மீட்டுள்ளார். பின்னர் மீண்டும் அந்த கேம் விளையாடுவதற்காக தாயாரிடம் 5 இலட்சம் ரூபா கேட்ட நிலையில் தாயார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட மனவிரக்தியால் கடந்த 25ஆம் திகதி தவறான முடிவெடுத்து வீட்டுக்கு முன்னால் நின்ற மாமரத்தில் தூக்கிட்டவேளை மாமரக் கிளை முறிந்து கீழே விழுந்து மயக்க நிலையில் காணப்பட்டார். இதனை அவதானித்த உறவினர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

– கஜிந்தன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *