இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 2025 ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,923,502 ஆகும்.
அவர்களில், 431,235 பேர் இந்தியாவிலிருந்தும், 177,167 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும், 138,061 பேர் ரஷ்யாவிலிருந்தும், 119,415 பேர் ஜேர்மனியிலிருந்தும், 113,619 பேர் சீனாவிலிருந்தும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.