32 இலட்சம் டெண்டர் பணம் செலுத்தி இறைச்சிக்கடையை கொள்வனவு செய்த பெளத்த பிக்கு
மத்துகம பிரதேச சபையினால் பொதுச் சந்தையில் நடத்திச்செல்லப்பட்ட இறைச்சிக் கடை ஒன்றை களுபஹனசேலதெலாராமய விகாரையின் விகாராதிபதி மாவிட்டஞானரத்ன தேரர் கேள்விப்பத்திரம் மூலம் கொள்வளவுசெய்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
மத்துகம பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளை மூடுவதற்குபௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து தீர்மானம் எடுத்தோம்.
பிரதேச அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்ததுடன், நகரநிர்வாக சட்டத்திற்கமைய இது தொடர்பில் தீர்மானமொன்றைஎடுப்பதற்கு அவர்களால் முடியவில்லை என்றும்தெரிவித்துள்ளார்.
இதனால், 2018ஆம் ஆண்டு கோள்விப் பத்திரத்தின் போதுவிண்ணப்பித்து, கடையை பெற்று மூடுவதற்குதீர்மானித்ததாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த கடையை 3,225,622 ரூபா செலுத்தி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கேள்விப்பத்திரம் மூலம் பெறப்பட்ட இறைச்சிக்கடை ஒன்றை மூடிவிட முடியாது என்று பிரதேச செயலாளர்கூறியதாகவும் மாவிட்ட ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.