2019 ஆம் ஆண்டில் 300 அரச வைத்தியசாலைகள் டிஜிட்டல் மயப்படுத்தும் ; டொக்டர் ராஜித
2019 ஆம் ஆண்டில் 300 அரச வைத்தியசாலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஹொரன ஆதார வைத்தியசாலையில் ஆரப்பிக்கப்படும் என்று சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குடும்ப சுகாதார பணியகத்தில் சமீபத்தில் இடம் பெற்ற நிகழ்விலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அரச வைத்திய சாலைகளுக்கு 7 நடமாடும் பல்சிகிச்சை வாகனங்களும் 50 கணனிகளும் இதன் போது வழங்கப்பட்டன. இவற்றின் பெறுமதி 407 மில்லியன் ரூபா என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டின் 350 மில்லியன் பெறுமதியான காலாவதியான மருந்து பொருட்கள் அழிக்கப்பட்டன.இக்கால பகுதியில் மருந்து விநியோகத்திற்கான முறையான வேலைத்திட்டம் இருக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.