வாந்தி எடுத்து அவமானப்பட்ட மாணவிக்கு உளவியல் பரிசோதனை
உணவு உட்கொள்ளாமையால் வாந்தி எடுத்து அவமானப்பட்ட மாணவியை சட்ட வைத்திய அதிகாரி மூலம் உளவியல் மருத்துவரிடம் காண்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அந்த வகையில் குறித்த மாணவி உளவியல் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளாரா என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பான விசாரணைகள் விரிவுபடுத்தப்படவுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இன்று அறிவித்துள்ளது.
மேலும், தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.
கெக்கிராவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவியொருவர் காலை உணவு உண்ணாததன் காரணமாக வாந்தி எடுத்த நிலையில், பாடசாலையின் அதிபர் அவர் கருவுற்றிருப்பதாக கூறி பாடசாலையில் இருந்து நீக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.