பிரதேச சபை தேர்தல்… வர்த்தமானியில் கையெழுத்திட்டார் அமைச்சர் பைசர் முஸ்தபா
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரத்தை வழங்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 11 மணிக்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கான ஆவணத்தில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கையொப்பமிட்டதாக அவரது அமைச்சு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
சர்ச்சையில் இருந்த மேலதிக நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளை அமைக்க நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.