கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் கல்விக் கொள்கை தயாரித்தல், திட்டம் வகுத்தல், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை எம்மால் சிறப்பாக முன்னெடுக்க முடிந்துள்ளது.
நிதி ஒதுக்கீட்டில் மாத்திரம் அனைத்தும் நடந்துவிடாது. நிறுவனக் கட்டமைப்பைப் பலப்படுத்தி, கொள்கைத் திட்டங்களுக்கு அமைய செயல்படுத்தப்பட வேண்டும்.
சவால்கள் இருக்கவே செய்கின்றன. பலவிதமான பலவீனங்கள் இருந்து வருகின்ற ஒரு துறையையே நாம் மேம்படுத்தி வருகிறோம். இதற்கு மேலும் இத்துறையின் செயல்திறன் அதிகரிக்கப்பட வேண்டும். பாடசாலைகள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் பிரச்சினை எழும்போது அதன் மீது திறமையாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். இருந்து வருகின்ற வரையறைகளைக் குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் எல்லா சவால்களையும் ஏற்றுக்கொண்டு, கொள்கைகளை உருவாக்கி, திட்டங்களைத் தயாரித்து, படிப்படியாக எமது பயணத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய