இந்தியாவில் நடைபெற்ற 16வது சர்வதேச திறந்த கராத்தே சாம்பியன்ஷிப்பில் இலங்கை ஷின்ராய் ஷோடோகன் கராத்தே சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட அணி, குமித்தே மற்றும் காதா ஆகிய போட்டிகளில் 02 தங்கப் பதக்கங்கள், 07 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 04 வெண்கலப் பதக்கங்களை வென்று புதன்கிழமை (26) அதிகாலை நாடு திரும்பினர்.
அவர்களை வரவேற்பதற்காக குறித்த அணியின் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இந்த போட்டி, இந்தோனேசியா ,மலேசியா , இந்தியா, தாய்லாந்து, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து 1300 போட்டியாளர்களின் பங்கேற்பில் நவம்பர் 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை இந்தியாவின் கோயம்புத்தூரில் இடம்பெற்றது.