வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி கோழிப் பண்ணைகளில் சுமார் 15 இலட்சம் கோழிகள் இறந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தெதுரு ஓயாவின் கீழ் பகுதியான கோபைகனே பிரதேசத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்த 10 இலட்சம் கோழிகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.
கோழிப் பண்ணைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தால் முட்டை உற்பத்தி சுமார் நாற்பது சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதன் விளைவாக எதிர்வரும் நாட்களில் முட்டை விலை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.