வடமத்திய மாகாணத்தில் பயிரிடப்பட்ட 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் முற்றிலுமாக சேதமாகிவிட்டது
வடமத்திய மாகாண விவசாய புத்திக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
சுமார் 8,750 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள செடி சேதமாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் 1,375 ஏக்கர் காய்கறிகளும் சேதமடைந்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அறுவடைக்கு அருகில் இருந்த மிளகாய் செடியில் பூஞ்சை நோய்கள் மற்றும் கருகல் நோயால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.