இத்தாலிய சீரி ஏ தொடரில், உடினிஸின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி தோற்றது.
உடினிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேர்ஜன் எக்கெலெங்கம்ப் பெற்றிருந்தார்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற ஸஸுலோவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் சமப்படுத்தியது. மிலன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் டேவிடே பர்டெசஹி பெற்றிருந்ததுடன், சஸூலோ சார்பாக இஸ்மயில் கொனெ, அர்மன்ட் லொரியன்டே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.