• Sat. Apr 4th, 2026

நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக

Byadmin

Feb 5, 2026

நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

இந்நாட்டின் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண், திருமதி ஜயரத்ன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி ஜயரத்ன, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளங்கலை (சிறப்பு) பட்டம் மற்றும் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) பெற்றுள்ளதுடன், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் மற்றும் அரச நிதி கணக்காளர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *