இலங்கையில் சுமார் 9 இலட்சம் SIM அட்டைகளுக்கான தனிநபர் தகவல்கள் பதிவு செய்யப்படவில்லை. அதனால், தகவல் இல்லாத SIM அட்டைகளுக்கான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இல்லையெனில் அந்த SIM அட்டைகள் செயலிழக்கச் செய்யப்படும்.
தற்போது 897,802 SIM அட்டைகள் உள்ளன. அவற்றை பாவிக்கும் நபர்களின் அடையாளத் தகவல்கள் முறைமையில் இல்லை.
எனவே, தரவு இல்லாத SIM அட்டைகள் பயன்படுத்தி குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. அதனால் இந்த தகவல்கள் தேவைப்படுவதால் மீள் பதிவு செய்யும் ஒழுங்குமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தவிர குற்றச்செயல்களை கட்டுப்படுத்த வழியில்லை.