• Sat. Oct 11th, 2025

பா.உறுப்பினர் நளீன் பண்டார FCID முன்னிலையில்

Byadmin

Nov 2, 2017

பா.உறுப்பினர் நளீன் பண்டார FCID முன்னிலையில்….

…………………

பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார ஜயமஹவுக்கு இன்று(02) நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா ஷிப்பிங் கார்ப்பரேஷன் இனால் கொள்வனவு செய்யப்பட்ட Ceylon Breeze மற்றும் Ceylon Princess ஆகிய கப்பல்களை கொள்வனவு செய்யும் போது அதன் விலைக்கு மாறாக அதிகளவு பணம் செலவாக்கப்பட்டுள்ளமை குறித்து வாக்குமூலம் ஒன்றினை வழங்கவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

கப்பல்களை கொள்வனவு செய்ய 70 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கொழும்பு- கோட்டை நீதிமன்றில் B 3932/16 எனும் இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *