கொழும்பு சம்மாங்கோட்டை ஜும்ஆ பள்ளிவாசலின் கடந்த வார குத்பா
நிகழ்த்தியவர்:
அஷ்ஷைஃக் றியாஸ் முப்தி (றஷாதி)
விரிவுரையாளர்-இப்னு உமர் இஸ்லாமிய உயர் கலாபீடம்
எலுவிலை, பாணந்துறை
1. இவ்வுலகில் உள்ள எல்லா மனிதர்களும் இரண்டு பிரதான விடயங்களின் பக்கம் உள்ளனர்.
2. ஒன்று தேவைகள் மற்றையது பிரச்சினைகள்.
3. தேவை உள்ளவர்கள் அதனை நிறைவேற்றும் முறைகளையும் பிரச்சினை உள்ளவர்கள் அதனை நீக்கும் முறைகளையும் தேடி அலைகின்றனர்.
4. அவ்விரு முறைகளுள் ஒன்று வெளிரங்கமான முயற்சிகள். பணம்/சக்தி/பலம் அல்லது யாரையாவது ஒருவரை நாடி அவர் மூலமாக தீர்த்துக் கொள்ள முயற்சித்தல். இது கொஞ்சம் கஷ்டமானது/உறுதியற்றது/முஸ்லிம் அல்லாதோர்களும் செய்யும் முயற்சிகள்.
5. இரண்டாவது உள்ரங்கமான முயற்சிகள். அமல்/துஆ
இது இலேசானது. நிச்சயமாக பயனளிக்கும். அல்லாஹ்வை உறுதியாக ஏற்றவர்கள் செய்யும் முயற்சிகள்.
6. தேவைகள் பிரச்சினைகளுக்கு முடிவுகள் பெற்றுக் கொள்வது எவ்வாறு என்ற அறிவு முஸ்லிம்களாகிய எம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.
7. பணம்/சக்தி/பலத்தை வைத்து யாரும் உதவி பெற்றதாகவோ கெளரவம் கண்ணியம் பெற்றதாகவோ இஸ்லாமிய சரித்திரத்தில் எங்கும் இல்லை. மாறாக அல்லாஹ்வுடனான தொடர்ப்பு மட்டுமே எம் ஈருலக வெற்றிக்கும் வழி.
8. நபி ஸுலைமான் (அலை)
முழு உலகையும் ஆட்சி செய்த நால்வரில் ஒருவர். காற்று மிருகங்கள் பறவைகள் ஊர்வன இன்னும் ஷைத்தான்கள் ஜின்கள் என எல்லாவற்றையும் அல்லாஹ் வசப்படுத்தி கொடுத்தான்.காரணம் அவர் புரிந்த பிரார்த்தனை.
9. நபி ஐயூப் (அலை)
பயங்கரமான நோயொன்றினால் பல வருடங்களாக அவதியுற்று தன் மனைவி மக்கள் சொத்து செல்வங்களை எல்லாம் இழந்து ஊரை விட்டு ஒதுக்கப்பட்டவர்கள். அவர் பிரார்த்தனை புரிந்தார். அல்லாஹ் அவருடைய நோயையும் நீக்கி இழந்தவைகளை விட அதிகமாக கொடுத்தான்.
10. நபி யூனுஸ் (அலை)
மீனினால் விழுங்கப்பட்டு ஆழ்ந்த இருள்களில் துன்புற்றவர்கள். அல்லாஹ் விமோசனத்தை அளித்தான். காரணம் அவர் புரிந்த பிரார்த்தனை.
11. அல்லாஹ்வினால் சபிக்கப்பட்ட இப்லீஸின் பிரார்த்தனை கூட அங்கீகரிக்கப்பட்டது. மறுமை நாள் வரை அவன் வாழ்வதற்கு அவனுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
12. இப்லீஸின் அளவா நாம் செய்த பாவங்கள்? சந்தேகம் ஒரு துளியும் வேண்டாம். அவசரமாக அல்லாஹ்விடத்தில் அழுது பிரதாபித்து எமது தேவைகளையும் பிரச்சினைகளையும் முறையிடுவோம்.
13. அவன் நித்திய ஜீவன்/என்றும் நிலைத்திருப்பவன்/அவனுக்கு சிறு தூக்கமோ பெருந்தூக்கமோ இல்லை.
14. அல்லாஹ் யாருக்கு துஆவுடைய கபூலிய்யத்தை நாடி இருக்கின்றானோ அவருக்கு துஆ கேட்கக்கூடிய சந்தர்ப்பத்தை அதிகமதிகம் வழங்குகிறான்.
15. இமாம் ராஸி (றஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
யாராவது ஒரு மனிதனுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு அவன் அல்லாஹ் அல்லாத ஒருவனிடத்திலோ அல்லது வேறு ஒரு பொருளிலோ நம்பிக்கையும் ஆதரவும் வைத்தால், அல்லாஹ் அந்த பிரச்சினைகளை மேலும் அதிகப்படுத்துவான்.
16. நபி யூஸுப் (அலை) அவர்கள் தனது சிறைவாச நிலைமை பற்றி அரசனிடம் சற்று கூறுமாறு தன் சக தோழனிடம் (மறதியாக) கேட்டுக்கொண்டதை கூட அல்லாஹ் விரும்பவில்லை. அல்லாஹ் நபி யூஸுப்பை இன்னும் சில ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கச் செய்தான்.
17. நாங்கள் தஹஜ்ஜத்துடைய தொழுகையை பரிசாக பெற்றவர்கள். எமக்கு என்ன பயம்? புகழ்வோம்,நன்றி செலுத்துவோம் அல்லாஹ்வுக்கு/நினைப்போம் அல்லாஹ்வை/நெருங்குவோம் அல்லாஹ்வை.
18. தஹஜ்ஜத்துடைய நேரம் நபிமார்கள்/ஸாலிஹீன்கள்/முத்தக்கீன்கள்/அவலியாக்கள் பயன்படுத்திய நேரம்.நேரடியாக அல்லாஹ்வின் உதவிகளை கண்கூடாக கண்ட நேரம்.
19. எல்லோருக்கும் தஹஜ்ஜத்துடைய பாக்கியம் கிடைப்பதில்லை. முக்கியமாக பாவிகளுக்கு அந்த பாக்கியம் கிடைப்பதில்லை.
20. எமது தேவைகளையும் பிரச்சினைகளையும் தெரிந்தவர்களிடமும் தெரியாதவர்களிடமும் ஊடகங்களிலும் முறையிடாமல், ஒவ்வொரு இரவின் கடைசி பகுதியிலும் எம்மை நோக்கி அழைக்கும் அந்த அளவற்ற அருளாளனிடம் முறையிடுவோம்.
21. எமக்கு பஸாரில் வெகு நேரம் நின்றபடி வியாபாரம் பண்ணலாம். ஆனால் தஹஜ்ஜத்திற்க்கு எழும்பி ஒரு ஐந்து நிமிடங்கள் நின்று தொழ கஷ்டம்.
22. நாளைக்கு ஒரு முக்கியமான Meeting or Appointment என்றால் அதற்காக இன்றே எவ்வளவு தயாரிப்புகள்/முயற்சிகள். ஏன் இன்றிரவு தஹஜ்ஜத்திற்க்கு தயாரிப்புகள்/முயற்சிகள் செய்யக்கூடாது.
23. எமது சமூகத்திற்கு விடியற்காலமே இரவு 10 மணிக்கு பிறகுதான். ஊர் சுற்றுவதும் அரட்டை அடிப்பதும். பிறகெப்படி தஹஜ்ஜத்திற்க்கு எழும்புவது?
24. மஃரிப்பிற்க்கு முன்பு உறங்கக்கூடாது. இஷாவிற்க்கு பின்பு பேசக்கூடாது. நேர காலத்துடன் சாப்பிட்டு விட்டு உறங்கினால் தஹஜ்ஜத்துடைய பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.
வல்ல அல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் அறிவிலும் ஆயுளிலும் பரக்கத்து செய்வானாக!