• Sat. Oct 11th, 2025

யஹியாகான் பெளண்டேஷனி னால் நிதி உதவி கையளிப்பு

Byadmin

Jun 5, 2017

பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் யஹியா கான் பெளண்டேஷன் அமைப்பானது சாய்ந்தமருது – 10ம் பிரிவில் வசிக்கும் யூ.கே.ரைசுத்தீன் என்பவருக்கு வீடு திருத்த வேலைகளுக்காக நிதி உதவியை. வழங்கும் நிகழ்வினை அவ் அமைப்பின் காரியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்தது யஹியா கான் பெளண்டேஷனின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமான அல்ஹாஜ் ஏ.சி.யஹியா கான் அவர்களினால் இந்நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வில் யஹியாகான் பெளண்டேஷனின் சிரேஸ்ட பிரதித் தலைவரும், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பிரதி அதிபருமான ஆர்.எம்.அஸ்மி காரியப்பர் அவர் களும் உபதலைவர்களான எம்.எம்.பாறுக், எம்.சி.எம்.மாஹிர் (ஆசிரியர்), ரீ.எல்.எம்.இல்யாஸ் மற்றும் பொருளாளர் ஏ.எம்.நவாஸ் உட்பட பெளண்டேஷனின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *