• Sat. Apr 4th, 2026

இலங்கை அணி இன்று பயிற்சி நடவடிக்கையில்

Byadmin

Nov 9, 2017

இலங்கை அணி இன்று பயிற்சி நடவடிக்கையில்

இந்தியாவுக்குச் சென்றுள்ள தினேஷ் சந்திமால்; தலைமையிலான இலங்கை டெஸ்ட  கிரிக்கெட் அணியினர் இன்று பிற்பகல் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
தினேஸ் சந்திமால் தலைமை இலங்கை அணி நேற்று இந்தியாவை சென்றடைந்தது. இவர்கள் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியுடன்  3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இட்மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகிறது..
இதற்கு முன்பாக இம்மாதம் 11, 12 திகதிகளில் இந்திய கிரிக்கெட் பேரவை தலைவர் லெவன் அணிக்கு எதிராக இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்திலும்  விளையாட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *