டிசம்பர் 31ம் திகதியுடன் சைட்டம் இரத்து…
அரச மருத்துவ கல்லுாரி மாணவர்களின் பெற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வாவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தினர் மற்றும் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வாவுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று(08) இடம்பெற்றது.
இதன்படி மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லுாரியை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் இரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.