கொலன்னாவையில் நிர்மாணிக்கப்பட்ட 396 தொடர் மாடி வீடுகள் மக்களிடம் கையளிப்பு
கொலன்னாவையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 396 தொடர் மாடி வீடுகள் கொண்ட லக்ச செவன நேற்று(8) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொலநாவையில் குப்பை மேட்டினால் வீடுகளை இழந்த 72குடும்பங்களுக்கும் இ்வ் வீடமைப்புத் திட்டத்தில் வீடுகள் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டன . இந்்நிகழ்வில் மேல்மாகண அபிவிருத்தி மாநகரங்கள் அபிவிருத்தி அமைச்சா் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பிணா் எஸ்.எம் மரிக்காரும் கலந்து கொண்டாா்.
-அஷ்ரப் ஏ சமத்-