பல இறக்குமதிப் பொருட்களுக்கான வரி குறைப்பு
ஒரு கிலோ பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்குக்கான வரி 39 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒருகிலோ பருப்புக்கான வரி 12 ரூபாவாகவும், கருவாடுக்கான வரி 50 ரூபாவாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, தேங்காய் எண்ணைக்கான வரி 25 ரூபாவாக குறைவடைந்துள்ளதாகவும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.