எரிபொருள் விநியோகம் இன்று நண்பகலின் பின்னர் வழமைக்கு திரும்பும்
சப்புகஸ்கந்த எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து, இன்று(09) நண்பகலின் பின்னர் எரிபொருளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என கனியவள அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விநியோகத்திற்கு முன்னதாக குறித்த கப்பலில் உள்ள எரிபொருளின் மாதிரி, தரப் பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து 40,௦௦௦ மெட்ரிக் தொன் எரிபொருளை தாங்கி வந்த நெவஸ்கா லேடி என்ற கப்பல் நேற்று(08) இரவு இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.