மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை_ விசேட அறிவித்தல்
நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு இல்லை என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உமாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள விசேட அறிவித்தலில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பெற்றோல் தட்டுப்பாடு நிலவுகின்றது என சிலர் வதந்திகளை நாடு பூராகவும்…
“ஆசியாவிற்கே எரிபொருளை வழங்க எங்களால் முடியும்” -சரத் அமுனுகம
“ஆசியாவிற்கே எரிபொருளை வழங்க எங்களால் முடியும்” -சரத் அமுனுகம #petrol #srilanka #lkr திருகோணமலை எண்ணெய் குதங்களை முறையாகப் பயன்படுத்தினால் ஒட்டுமொத்த ஆசியாவுக்கும் இலங்கையிலிருந்தே எரிபொருளை விநியோகிக்க முடியும் என விசேட மறுசீரமைப்பு அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். எனினும், இதுதொடர்பில்…
ஜனாதிபதி நியமித்த குழு அறிக்கையை கையளித்தது. இலங்கையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு காரணம் வெளியானது
ஜனாதிபதி நியமித்த குழு அறிக்கையை கையளித்தது. இலங்கையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு காரணம் வெளியானது கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு, இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி தொடர்பில் ஆய்வு செய்வதற்காக…
எதிர்காலத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் !
எதிர்காலத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் ! உடனடியாக தீர்க்கமான நடவடிக்கையை முன்னெடுக்கப்படுக்காவிட்டால்மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என பெற்றோலிய துறைஅமைச்சர் அர்ஜுன ரனதுங்க குறிப்பிட்டார். தற்போது நிலமை சீரடைந்துள்ளது என்றாலும் இலங்கைக்கு வரும்எரிபொருள் கப்பல்கள் தாமதமடைந்தால் மீண்டும் நாட்டில் எரிபொருள்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் , முதலீட்டாளர் ஒருவரை அவசரமாக தேடிப்பிரித்து எரிபொருள் சுத்திக்கரிப்புதொகுதி ஒன்றை உடனடியா நிறுவ வேண்டும் என அவர் மேலும்குறிப்பிட்டார்.
மக்களிடம் நன்றாக, திட்டு வாங்குகிறேன் – மைத்திரி
மக்களிடம் நன்றாக, திட்டு வாங்குகிறேன் – மைத்திரி நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையினால் தான் நன்றாக மக்களிடம் திட்டு வாங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாதுலுவாவே சோபித்த தேரரின் இரண்டாவது நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி…
எரிபொருள் விநியோகம் இன்று நண்பகலின் பின்னர் வழமைக்கு திரும்பும்
எரிபொருள் விநியோகம் இன்று நண்பகலின் பின்னர் வழமைக்கு திரும்பும் சப்புகஸ்கந்த எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து, இன்று(09) நண்பகலின் பின்னர் எரிபொருளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என கனியவள அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. விநியோகத்திற்கு முன்னதாக குறித்த கப்பலில் உள்ள எரிபொருளின் மாதிரி, தரப்…
எரிபொருள் தட்டுப்பாடு நாளை நண்பகலுடன் நீங்கும் – அர்ஜூன ரணதுங்க
எரிபொருள் தட்டுப்பாடு நாளை நண்பகலுடன் நீங்கும் – அர்ஜூன ரணதுங்க! இன்று இரவு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்றும், நாளை நண்பகலுக்குள், பெற்றோல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்றும் சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி வருகிறது
இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி வருகிறது பெற்றோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இவ் வாரம் இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாளை ஒரு கப்பலும், இந்தியாவில் இருந்து நாளை மறுதினம் (09) ஒரு கப்பலும் நாட்டுக்கு வரவுள்ளதாக…
நிலமை சீராக 11 அல்லது 12 ம் திகதி ஆகலாம்
நிலமை சீராக 11 அல்லது 12 ம் திகதி ஆகலாம்! நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து நாட்டைகொள்ளையடிப்பதை ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் சங்கத்தின் தலைவர்பந்துல சமன் குமார குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர் 8 ம் திகதி நள்ளிரவு எரிபொருள் ஏற்றியகப்பல் ஒன்று இலங்கை வந்தடையவுள்ளது.குறித்த எரிபொருள்பாவனைக்கு உகந்ததாக அடையாளம் காணப்பட்டால் 9 ம் திகதிநன்பகல் முதல் அவை அவை கலஞ்சியப்படுத்தப்பட்டு பின்னர் நாடுபூராகவும் விநியோகிக்கப்படும். ஆகக் குறைந்தது இந்த எரிபொருள் தட்டுப்பாடு 11 அல்லது 12 வரைநீடிக்க வாய்ப்புள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோல் பற்றாக்குறை ! அரசாங்கமே பொறுப்பு..
பெற்றோல் பற்றாக்குறை ! அரசாங்கமே பொறுப்பு.. நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் பற்றாக்குறைக்கு அரசாங்கமேபொறுப்பேற்க வேண்டும் என, பெற்றோலிய வள சேவையாளர்கள் சங்கத்தின் செயலாளர்டி.ஏ.ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.