நிலமை சீராக 11 அல்லது 12 ம் திகதி ஆகலாம்!
நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து நாட்டைகொள்ளையடிப்பதை ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் சங்கத்தின் தலைவர்பந்துல சமன் குமார குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் 8 ம் திகதி நள்ளிரவு எரிபொருள் ஏற்றியகப்பல் ஒன்று இலங்கை வந்தடையவுள்ளது.குறித்த எரிபொருள்பாவனைக்கு உகந்ததாக அடையாளம் காணப்பட்டால் 9 ம் திகதிநன்பகல் முதல் அவை அவை கலஞ்சியப்படுத்தப்பட்டு பின்னர் நாடுபூராகவும் விநியோகிக்கப்படும். ஆகக் குறைந்தது இந்த எரிபொருள் தட்டுப்பாடு 11 அல்லது 12 வரைநீடிக்க வாய்ப்புள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.