• Sat. Oct 11th, 2025

பொதுஜன பெரமுனயில் போட்டியிட 3 ஆயிரம் முஸ்லிம்கள் விண்ணப்பம்

Byadmin

Nov 7, 2017

பொதுஜன பெரமுனயில் போட்டியிட 3 ஆயிரம் முஸ்லிம்கள் விண்ணப்பம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனயுடனான
கூட்டணியில் போட்டியிடுவதற்கு மொத்தம் 78 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்களில் 3 ஆயிரம் பேர் முஸ்லிம்களாவர் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக கருத்து வெளியிடு கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“தாமரைமொட்டுச் சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயுடனான கூட்டணியில் போட்டி யிடுவதற்கு விண்ணப்பித்துள்ள 3 ஆயிரம் முஸ்லிம்களில் உலமாக்களும் அடங்குகின்றனர்.

அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, ஸ்ரீலங்கா, தெளஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்
அடங்குகின்றனர்.

கிழக்கிலிருந்தே அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்தும் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று வருகின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் அபேட்சகர்களைத் தெரிவுசெய் வதற்கான நேர்முகப்பரீட்சை நடத்தப்படும்.

கட்சியின் கொள்கைகளையும், முஸ்லிம்களுக்கு கட்சி மூலம் கிடைக்கப்பெறவிருக்கும் நன்மைகள், உரிமைகள் தொடர் பான தெளிவூட்டல்கள் தற்போது நாடளாவிய ரீதியில் முஸ்லிம் பிரதேசங்களில் நடத்தப்பட்டு வருகின்றன” என்றார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 20 சகோ தர அரசியல் கட்சிகளுடன் இணைந்து கூட்டணியாக எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறதென ஸ்ரீலங்கா பொது ஜனபெரமுனவின் ஊடகச்செயலாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

பொதுஜனபெரமுன20 கட்சிக ளையும் இணைத்துக் கொண்டு கூட்டணியாக தாமரைமொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவ தற்குத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக் கையில்; கூட்டணி அகில இலங்கை ரீதியில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணைந்த எதிர்க்கட்சி உட்பட தமிழ், முஸ்லிம் அமைப்புகளும் கட்சிகளும் தாமரைமொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளன.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும்பான்மையான சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்ததரப்பு ஆதரவாளர்கள் தொகை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது என்றார்.

-ஏ.ஆர்.ஏ.பரீல்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *