பல வெற்றிப்படிக்கட்டுகளை கடந்து சிகரம் தொட்ட மாத்தளை ஸாகிர் அஹ்மத்
மாத்தளையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது கல்வியை சாஹிராக் கல்லூரியில் (மாத்தளை) தொடர்ந்து, படிப்படியாக தனது சுய முயற்சியால் 1987ம் ஆண்டில் Casons Rent A Car (PVT) Ltd எனும் பெயரில் ஒரு நிறுவனத்தை ஸ்தாபித்து, கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக அத்துறையில் அந்நிறுவனத்தை இலங்கையிலேயே ஒரு முன்னணி நிறுவனமாக உருவாக்கிய M.C.Zakir Ahamed இன் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியதே.
அதனை தொடர்ந்து அவரது சகோதரரான M.C.Zufer Ahamed, 1991ஆம் ஆண்டில் Casons Rent A Car (PVT) Ltd இன் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
28ம் திகதி, ஒக்ரோபர் மாதம் 2017ம் ஆண்டு மாலைத் தீவு, அத்து நகரத்தில் (Gan Island) நடாத்தப்பட்ட தென் ஆசிய பயண விருதுகள் (பல்தேசிய சங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட முதல் பிராந்திய பயண விருதுகள் SATA 2017) என்னும் விருது விழாவில் பற்பல மதிப்பு மிக்க நிறுவனங்களுக்கிடையே இடம்பெற்ற போட்டியில் விருதுகளை தட்டிச் சென்றார்.
* 2017ஆம் ஆண்டிற்கான தென் ஆசியாவின் முன்னணி போக்குவரத்து வழங்குநர் என்னும் பிரிவில் தங்க விருதையும்…
*2017ஆம் ஆண்டிற்கான பிராந்திய சிறந்த வாடகைக்கார் நிறுவனம் என்னும் பிரிவில் வெள்ளி விருதையும் Casons Rent A Car (PVT) Ltd தன்வசப்படுத்திக்கொண்டது.
எண்ணெய் விளக்கு ஒளியில் கற்று முன்னேறிய அவர் எப்போதும் கூறுவது…
“நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, ஏனெனில் நான் என்றும் நான் விரும்பாத தொழிலைச் செய்ததில்லை.. நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை என் வாழ்வின் ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டேன். மேலும் அதனை செய்ய என்னை ஒரு நிலைப்படுத்தினேன்..
நீங்கள் சாத்தியக்கூறுகள் மீது கவனம் செலுத்தும் போது, உங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.பயப்படாதீர்கள்.
பயத்தை வேகமாக எதிர் கொள்ளுங்கள்…
நீங்கள் ஒரு போதும் செய்யாத ஒன்றை முயற்சித்து பாருங்கள், அதன் மூலம் பெறாத ஒன்றை கூட பெறுவீர்கள்…
உங்கள் நல்ல பெயர்களை வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கே நீங்கள் சவால் விடுங்கள்.
மற்றவர்களுக்கு உதவுங்கள்.
வெற்றி கொள்ள முன்னே செல்லுங்கள்” என தெரிவித்தார்.