• Sun. Oct 12th, 2025

“ஞானசார அசின் விராதுவுக்கு தஃவா கொடுக்க போயுள்ளதாக அஸாத் சாலி கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” – மிப்லால் மவ்லவி

Byadmin

Nov 10, 2017

“ஞானசார அசின் விராதுவுக்கு தஃவா கொடுக்க போயுள்ளதாக அஸாத் சாலி கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” – மிப்லால் மவ்லவி

ஞானசார அசின் விராதுவுக்கு தஃவா கொடுக்க போயுள்ளதாக அஸாத் சாலி கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்லால் மவ்லவி குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அண்மைக் காலமாக அசாத்சாலி அணியினருக்கும் ஞானசார தேரர் அணியினருக்குமிடையில் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இதில் ஞானசார தேரர் இஸ்லாம் பற்றி தெளிவுற்றுவிட்டார் என்ற வகையிலான ஊடக செய்திகள் அசாத்சாலி அணியினரால் பரப்பட்டிருந்தது.இது பற்றி பொது பல சேனா அணியினரிடம் கேட்டால் அசாத்சாலி அணியினர் கூறுவதற்கு தாம் பொறுப்பல்ல என கூறி வருகின்றனர்.
இன்னும் பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ள நிலையில் மியன்மார் முஸ்லிம்களை கொன்று குவிக்கக் காரணமாக அசின் விராது தேரருடன் ஞானசார தேரர் பல சுற்று பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். நிச்சயமாக இதில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் அமைந்திருக்கும் என்பதில ஐயமில்லை. இருவரும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கொண்டவர்கள். இவ் விடயமானது ஞானசார தேரர் இன்னும் திருந்தவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறது.
சில வேளை அசாத்ஸாலியின் தஃவாவினால் ஞானசார தேரர் கவரப்பட்டு அசின் விராது தேரருக்கு தஃவா செய்ய சென்று விட்டாரோ தெரியவில்லை. இதன் பிறகும் அசாத்சாலி அணியினர் ஞானசார தேரர் தொடர்பிலான பேச்சு வார்த்தைகளில் விட்டுக்கொடுப்புக்களுடனான தீர்வை சிந்திப்பார்களாக இருந்தால் அவர்களைப் போன்ற துரோகிகள் யாரும் இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *