பொலன்னறுவை மாவட்ட மு.கா அரசியல் பிரதிநிதியாக செய்யித் அலி ஸாஹிர் மெளலானா நியமணம்
பொலன்னறுவை மாவட்ட மக்களின், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிநிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா நேற்று முன்தினம் (11) கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் நியமிக்கப்பட்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பொலன்னறுவை மாவட்டத்தில் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிநிதியொருவர் இல்லாத குறையினால், அங்குள்ள முஸ்லிம்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனை கருத்திற்கொண்டே பொலன்னறுவை மாவட்ட அரசியல் பிரதிநிதியாக அலிஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
-ஷபீக் ஹுஸைன்-