• Sat. Oct 11th, 2025

அரபு நாடுகளில், ஒரே நேரத்தில் நிலநடுக்கம்

Byadmin

Nov 13, 2017

அரபு நாடுகளில், ஒரே நேரத்தில் நிலநடுக்கம்

ஈரான் ஈராக் எல்லையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலமெனியா என்ற இடத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. துபாய், அபுதாபி, ஐக்கிய அரபு நாடுகளில் பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.
பயங்கர நிலநடுக்கத்தால் ஈராபில், தூகூக், அல்பஜ்ஜா ஆகிய இடங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான தாக கூறப்படுகிறது. அங்கு இருந்த மக்கள் ஏற்கனவே வன்முறையால் கட்டிடங்கள் காலி செய்து விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *