• Sun. Oct 12th, 2025

அரசாங்கத்துக்கு எதிரான குழுவினரின் ஒப்பந்ததை ஆளுனர் கிழக்கில் நடைமுறைப்படுத்துகின்றாரா???முன்னாள் கிழக்கு முதல்வர் சந்தேகம்

Byadmin

Nov 15, 2017

அரசாங்கத்துக்கு எதிரான குழுவினரின் ஒப்பந்ததை ஆளுனர் கிழக்கில் நடைமுறைப்படுத்துகின்றாரா???முன்னாள் கிழக்கு முதல்வர் சந்தேகம்

கிழக்கின் ஆளுனராக பதவியேற்றுள்ள ரோஹித பொகொல்லாகமவினால் முன்னெடுக்கப்படும் சில எதேச்சாதிகரமான செயற்பாடுகள் முன்னாள் ஆட்சியாளர்களுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம்பெறுகின்றதா என்ற கேள்வியை தோற்றுவித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

 

சிறுபான்மை சமூகங்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த செயலாளர்கள் சிலரை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி  நிர்வாக நடைமுறைக்கு மாற்றமாக இடமாற்றியிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை தோற்றுவித்துள்ளதாகவும் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் கூறினார்

 

மாகாணத்தின்  உயர் அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள்  சிலர்  முறைகேடான  முறையில்  இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து வினவியப்போதே கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்

 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட்

 

தற்போது மாகாண அரசின் முக்கிய  அரச  அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள் சிலர்  அவர்களுக்கு எவ்வித முன்னறிவித்தலுமின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,

 

நல்லாட்சிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இவர்கள் குறித்த பகுதிகளில் அரசாங்கத்தின் சேவைகளை மிக நேர்த்தியான முறையில் முன்னெடுத்து வந்தனர்,

 

இந்த நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ள நிலையில் குறித்த அதிகாரிகளை திடீரென இடமாற்றியுள்ளமை இதன் பின்னால் ஆளுனரின் சுயலாப அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் உள்ளதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது,

 

2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் தனியொருவரின் சர்வாதிகாரம் இடம்பெற்று வந்த்தோ இன்று சிறுபான்மையினருக்கு அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது

 

ஏனெனில் ஒரு அதிகாரியை இடமாற்றம் செய்வதென்றால் அவர்களுக்கு குறைந்த பட்சம் ஒரு   மாத்த்திற்கு  முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்,

 

அதன் பின்னர் அவர்கள் தமது ஆவணங்கள் மற்றும் ஏனைய கடமைகளை புதியவரிடம் ஒப்படைத்து விட்டு அவர்கள் கடமைகளை பொறுப்பேற்பார்கள்,

 

ஆனால் இங்கு அலுவல நாள் அல்லாத கடந்த 11.11.2017 சனிக்கிழமை கடிதம் தயார் செய்யப்பட்டு திடீரென திங்கட்கிழமை  சிறுபான்மையின அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது அநீதியானதும் அசாதாரணமான செயற்பாடுமாகும்

 

அரச ஊழியர்கள் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி  தொழில் புரிந்து  வருகின்ற போது அவர்களுக்கு இது  வருடாந்த இடமாற்றமாகவும் இன்றி   எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி  திடீரென  இடமாற்றுவது மனிதபிமானமற்றதாகும்

 

இந்த திடீர் இடமாற்றங்கள்  நேர்மையான அதிகாரிகளை  அவமானாப்படுத்துவதாக அமைவதுடன் அவர்களுக்கு மன உளைச்சல் மற்றும் குற்ற உணர்வுகளை  ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

 

எனவே இது அரச அதிகாரிகளின் அடிப்படையை உரிமையை மீறும் செயலாகும்,

 

அதுவும் மாத இறுதியில் அரச பொறிமுறையில் பெரும்பாலும் இடமாற்றங்கள் இடமபெறுவதில்லை,ஏனெனில் நவம்பர் மற்றும் டிசம்பர் காலப் பகுதியில் தான் அதிகாரிகள் தமது கணக்கறிக்கைகள் ,உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திதிட்டங்களை  நிறைவு செய்வது உள்ளிட்ட பல விடயங்களை  நிறைவேற்றவேண்டிய தருணம்,

ஆகவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டமை கிழக்கின் நிர்வாகக் கட்டமைப்பை சீர்குலைக்க ஆளுநர் முன்னெடுக்கும் திட்டம் என்றே நாம் இதனைக் கருத வேண்டியுள்ளது,

 

அவ்வாறானால் நல்லாட்சியிம் கீழுள்ள நிர்வாகக் கட்டமைப்பை ஆளுநர் யாருடைய தேவைக்காக சீர் குலைக்கின்றார்,

 

கடந்த ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நம்பிக்க்கைக்கு உரியவராகி உயர்ந்த பதவிகளில் ஒன்றான வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்ததுடன் ஏனைய பதவிகளையும் வகித்திருந்தார்,இந்த நிலையில் ஜனவாரி எட்டாம் திகதி மாற்றத்தின் பின்னரும் அவர் முன்னாள் ஜனாதிபதியுடனேயே இருந்தார் என்பதையும் மக்கள் அறிவார்கள்,

இந்த நிலையிலேயே கிழக்கின் உயர் மட்ட அரச நிறுவனங்களுக்கு பெரும்பான்மையின அதிகாரிகளை ஆளுனர் நியமிக்கப்போவதகவும் அண்மையில் செய்தியொன்றை படிக்கக் கிடைத்தது,

எனவே உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் கிழக்கின் நிர்வாகக் கட்டமைப்பை சீர்குலைக்கும் முன்னாள் ஆட்சியாளர்களின் ஒப்பந்ததை நிறைவேற்றி வருகின்றாரா என்ற நியாயமான சந்தேகம் தற்போது தோன்றியுள்ளது,

ஆகவே ஜனாதிபதியும் பிரதமரும் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தி ஆளுனரின் எதேச்சாதிகாரமான செயற்பாடுகளை கட்டுப்படுத்த முன்வரவேண்டும்.

அத்துடன் கிழக்கில்  மீண்டும் தலைதூக்கும்  எதேச்சாதிகார செயற்பாடுகளுக்கு  எதிராக கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும்  இது  குறித்து தமது  எதிர்ப்பை வெளியிட வேண்டும்.

இல்லாவிடில் இதன் மூலம்   மக்கள் மத்தியில் தற்போது  தோன்றிவரும் அதிருப்திப் போக்கு அரசாங்கத்தின் எதிர்வரும் தேர்தல்களில் பிரதிபலிக்கும் நிலை ஏற்படும் என முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *