சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பதட்டநிலை… சுனாமி பயம் வேண்டாம்
சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் சுனாமி அச்சத்தில் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர்.
நீலாவணை பிரதேசத்தில் கடலலை வீதிக்கு வந்தாகவும் சில இடங்களில் உள் சென்றதாகவும் சொல்லப்படுகின்றது. அத்துடன் கடலை அண்டிய இடங்களிலுள்ள கிணற்றுநீர் வற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். சாய்ந்தமருதிலுள்ள பாடசாலைகள் கலைக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு சேவையிலும் நெருக்கடி நிலவுகிறது. இதனால் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது.
இதேவேளை, இந்தோனேசியாவில் 4.0 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் வந்துள்ளது. இருப்பினும் இதனால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அனர்த்த நிவாரண நிலையம் அறிவித்துள்ளது.
சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் கடல் இயல்புநிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, பாண்டிருப்புப் பகுதிகளில் காலை 10.30 மணியிலிருந்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கரையோரப் பாடசாலைகள் சில மூடப்பட்டதுடன், அலுவலகங்கள், நிறுவனங்கள் சிலவும் மூடப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
தகவல்: பிரௌஸ்
படங்கள்: சமால்தீன்