எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் வேதனம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன நாடாளுமன்றில் வைத்து நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
அலுவலக உதவியாளரில் இருந்து சட்டமா அதிபர் வரையில் அனைத்து அரச பணியாளர்களுக்கும் இந்த வேதன அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.
அதன்படி, அலுவலக உதவியாளரின் அடிப்படை வேதனம் 14ஆயிரம் ரூபாயில் இருந்து 23 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும்.
அதுபோல சட்டமா அதிபரது வேதனம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட மருத்துவர்களின் அடிப்படை வேதனம் 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 69ஆயிரத்து 756 ரூபாவாக அதிகரிக்கப்படும்.