இந்தியா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தை நோக்கி 38 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
இன்று (06.05.2017) அதிகாலை சுமார் ஒரு மணியளவில் பரேலியில் உள்ள தேசிய நெஞ்சாலை வழியாக வந்தபோது எதிரே படுவேகமாக வந்த லாரி அந்த பேருந்தின்மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறினார்கள். வெளியேற முடியாமல் தீயின் கோரத்தாண்டவத்துக்கு இரையான 22 பேர் இந்த விபத்தில் உடல் கருகி உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 15 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து நடந்த 90 நிமிடம் கழித்து தான் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.