• Sun. Oct 12th, 2025

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

Byadmin

Nov 17, 2017

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

பேச்சு சுதந்திரம் ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றானபோதும் அதனை சமூக

நன்னடத்தை முறைகள் சிதையாது உபயோகிக்கவேண்டும் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இது தொடர்பாக அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
பேச்சு சுதந்திரத்தினை சிறந்து தொடர்பாலுக்காக மாத்திரமே உபயோகிப்பது மக்கள் அனைவரதும் பொறுப்பாகும். இது தொடர்பில் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தனிப்பட்ட அல்லது முரண்பாடான அல்லது தனிநபரை அவமானப்படுத்தும் கருத்துக்கனை முன்வைப்பதற்காக தொலைத்தொடர்பு அமைப்புக்களையோ சமூக வலைத்தளங்களையோ ( பேஸ்புக், ருவிட்டர்) குறுந்தகவல் அனுப்புதல் அல்லது தொலைபேசி உரையாடல் போன்றவற்றையோ மேற்கொள்ளக்கூடாது.
அநாகரீகமான , ஆபாசமான , வன்முறையை தூண்டும் விதத்திலான , பாலியல் முறைகேடான , அச்சுறுத்தும் விதமான மிகவும் எரிச்சலூட்டும் அல்லது தொந்தரவூட்டும் தகவல்களை அனுப்புதல் தகுந்த காரணம் இன்றி குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்புகளை விடுத்தது எரிச்சலை அல்லது வேதனையை உருவாக்குவது குற்றங்களாகும்.
குற்றவாளி கண்டறியப்படும் பட்டசத்தில் , இவற்றிற்கு தண்டப்பணம் செலுத்துவது சிறைத்தண்டனை பெறுவதற்கு அல்லது இவ்விரு தண்டனைகளுக்கும் உள்ளாக நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *