பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம் : ரிக்டரில் 6.2 ஆக பதிவு
பப்புவா நியூ கினியா தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், பப்புவா நியூ கினியா தீவு பகுதி அமைந்த பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கம் ரபாவல் நகரின் கிழக்கே 125 கி.மீட்டர் தொலைவில் 70 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் பற்றிய தகவல் உடனடியாக வெளியிடப்படவில்லை.