• Sat. Oct 11th, 2025

வெற்று துப்பாக்கியை காட்டி வங்கியை கொள்ளையடிக்க முயன்ற 86 வயது பாட்டி

Byadmin

Nov 28, 2017

வெற்று துப்பாக்கியை காட்டி வங்கியை கொள்ளையடிக்க முயன்ற 86 வயது பாட்டி

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வங்கியில் காலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அங்கு 86 வயது பாட்டி உள்ளே வந்தார்.

நடக்க முடியாத நிலையில் இருந்த அவர் ‘வாக்கிங் ஸ்டிக்’ வைத்து இருந்தார். அப்போது திடீரென தான் வைத்திருந்த ஒரு துப்பாக்கியை காட்டி அனைவரையும் மிரட்டினார். அதனால் வங்கியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

உடனே போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து பாட்டியை கைது செய்தனர். அவர் விலங்கு வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கி வைத்திருந்தார். அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அப்போது அவர் மயங்கி விழுந்தார். முதலுதவி சிகிச்சைக்குப்பின் அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது தான் வைத்திருந்தது குண்டுகள் நிரப்பாத வெற்று துப்பாக்கி என அவர் தெரிவித்தார். அது போன்று துப்பாக்கியில் குண்டுகள் இல்லை. அவரது கைப்பையிலும் குண்டுகள் காணப்படவில்லை.

இச்சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் பாட்டி இதே வங்கிக்கு வந்தார். அப்போது அவரிடம் இருந்து 400 டாலர் அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதை மீண்டும் திரும்ப பெறவே கொள்ளையில் இறங்கியதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *