சத்து நிறைந்த தக்காளி – பருப்பு சூப்
தேவையான பொருட்கள் :
தக்காளி – 3
வெங்காயம் – 1
துவரம்பருப்பு – கால் கப்
பூண்டு – 5 பல்
தண்ணீர் – 2 கப்
இஞ்சி – சிறிதளவு
மிளகாய் – 2
நெய் – சிறிதளவு
மிளகு – சிறிதளவு
சோம்பு – சிறிதளவு
செய்முறை :
தக்காளி, மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பருப்பை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
குக்கரில் வெங்காயம், தக்காளி, பூண்டு, பருப்பு, இஞ்சி, மிளகாய், உப்பு ஆகியவற்றை போட்டு, தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். மூன்று விசில் வந்ததும் இறக்க வேண்டும்.
இந்த கலவையை ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும்.
வடிகட்டிய சூப்பை அடுப்பில் வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி அதில் மிளகு, சோம்பு சேர்த்து வறுத்து, சூப்பில் சேர்த்து சூட்டோடு ருசியுங்கள்.
சூப்பரான தக்காளி – பருப்பு சூப் ரெடி.