கோட்டாபய’வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(28) தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்மானம் இன்று(29) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பீ தெஹிதெனிய மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் நேற்று(28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்வரும் டிசம்பர் 06ம் திகதி வரை தடை விதிக்கப்ப ட்டுள்ளது.