• Sat. Nov 1st, 2025

“வெற்றி தோல்வி முஸ்லிம் வாக்காளர்களிலேயே தங்கியுள்ளது” – பசில் ராஜபக்ச

Byadmin

Dec 4, 2017

“வெற்றி தோல்வி முஸ்லிம் வாக்காளர்களிலேயே தங்கியுள்ளது” – பசில் ராஜபக்ச

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வி முஸ்லிம் வாக்காளர்களிலேயே தங்கியுள்ளது.

அந்த வகையில் முஸ்லிம்களின் வாக்குகள் மிகவும் பெறுமதி வாய்ந்தனவாகும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது யாப்பில் முஸ்லிம் முற்போக்கு முன்னணிக்கு முக் கிய இடம் வழங்கியுள்ளது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லை நெலும்பொக் குன மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனயின் அலுவலக கேட்போர் கூடத்தில் நடை பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சில குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளால் முஸ்லிம்கள் அதிருப்தி கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்த்து வாக்களித்தார்கள்.

முஸ்லிம்களை முன்னாள் ஜனாதிபதியிடமிருந்தும் பிரித்தெடுக்க மேற்கொள்ளப்பட்ட சதியினாலேயே இவ்வாறான நிலை ஏற் பட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்தத் தவறுகளை உணர்ந்துள்ளது.

அவற்றைத் திருத் திக்கொண்டு நாம் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளோம். நல்லாட்சி அரசாங்கத்தில் கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதை விட அதிகமான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

முஸ்லிம்களைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிபீட மேறியவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்களில் மெளனமாக இருக்கிறார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் கலாசாரத்துக்கு உறுதி வழங்குகிறது. தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்கும் இக்கட்சி எதிர்காலத்தில் ஆட்சியமைப்ப தற்கு முன்னோடியாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எமக்கு வாக்களிக்க வேண்டும்.

எம்மோடு கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 20 அர சியல் கட்சிகள் சேர்ந்துள்ளன.

கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் பெருமளவிலான முஸ்லிம்கள் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவதாக ஆட்சிக்கு வந்தவர்கள் கிந்தோட்டை விவகாரத்தில் மெளனம் காக்கிறார்கள் என்றார். கூட்டத்தில் மேல் மாகாண சபை உறுப்பினர் சகாவுல்லா, மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *